திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிற்குள் இன்று காலை புதிய கட்டடத்துக்காக குழி தோண்டிய போது, பழங்கால பீரங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பீரங்கி சுமார் 15 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொள்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரவன்ச தெரிவித்துள்ளார்.